Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புதுப்பொலிவுடன் உதயமாகும் நியூயார்க் இரட்டை கோபுரம் (காணொளி இணைப்பு)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் `ட்வின்ஸ் டவர் ' என்ற பெயரில் உலக வர்த்தக மைய கட்டிடம் இருந்தது. இரட்டை கோபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடத்தை கடந்த 2001-ம் அல்கொய்தா தீவிரவாதிகள் தரை மட்டமாக்கினர். 

அந்த கட்டிடத்தை மீண்டும் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி மீண்டும் இரட்டை கோபுரங்களுடன் வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டுவருகிறது. அதில், ஒரு கட்டிடம் 1250அடி (381 மீட்டர்) உயரத் திலும், மற்றொன்று 1,776 அடி (541.3 மீட்டர்) உயரத்திலும் கட்டப்படுகிறது. 

அதில் 1250 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது. மற்றொரு கோபுரம் அடுத்த ஆண்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடம் 104 அடுக்குமாடிகளை கொண்டதாக கட்டப்படுகிறது. இதன்மூலம்  நியூயார்க் நகரில் மிக உயரமான கட்டிடம் என்ற அந்தஸ்தை மீண்டும் பெறுகிறது.


[vuukle-powerbar-top]

Recent Post