Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முழு வீச்சில் நடக்கும் அணு உலை போராட்டம். உச்சத்தை அடைகிறது அரசின் அடக்குமுறை.(படங்கள்)





முழு வீச்சில் நடக்கும் அணு உலை போராட்டம். உச்சத்தை அடைகிறது அரசின் அடக்குமுறை.

இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக மக்கள் குறிப்பாக பெண்கள் பெருமளவில் போராடி வருகிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தை எப்படியும் ஒடுக்கி விட வேண்டும் என அரசு தீவிரம் காட்டி வருகிறது . இடிந்தகரை சுற்றியும் காவல் படையினரை குவித்து உள்ளது. கூடங்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் 144  தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் கடந்த 6 நாட்களாக ஈடுபட்டுக் கொண்டிருகின்றனர். ஆனால் அவர்கள் போராட்டத்திற்கு அரசு இது வரை செவி சாய்க்காமல்  , மென் மேலும் அடக்கு முறையை ஏவி விட்டுக் கொண்டிருக்கிறது அரசு.


போராளிகள் என்ன கேட்கிறார்கள் ? அணு உலைகளை திறப்பதற்கு முன் பேரிடர் மேலாண்மை பயிற்சி கூடங்குளம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் . ஆனால் இதை கூட செய்ய மறுக்கிறது  அரசு. இந்நிலையில் இடிந்தகரை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் பெரும்பாலான எண்ணிகையில் பெண்களும் குழந்தைகளும் இடிந்தகரையில் குவிந்த வண்ணம் இருந்தனர். ஆனால் அரசு தடை உத்திரவு போட்டதால் , மக்களால் இடிந்தகரைக்குள் நுழைய முடியவில்லை. அதனால் அனைத்து கிராம மக்களையும் அவரவர் ஊர்களிலேயே போராட்டம் நடத்தும் படி அணு உலை எதிர்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால்  கோவில்கள், தேவாலயங்கள் முதலிய வழிபாட்டுத் தளங்களில் அணு உலை போராளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் . அங்கு அவர்கள் அணு உலைகளை மூட வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனர். 


இப்படி பெரும்திரளான மக்கள் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக திரண்டு நிற்கிறார்கள் . ஆனால் அரசோ அதை பற்றியெல்லாம் கவலை படாமல்  இவர்களை ஒடுக்குவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. இப்படி ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை அரசு ஒடுக்குவது ஜனநாயகத்தின் கழுதை நெருக்கும் செயல் என்று மனித உரிமை ஆர்வர்களும் தேசப் பற்றாளர்களும் கருதுகின்றனர். இப்போது நாட்டின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும் படி அரசே செய்கிறது. அறவழிப் போராட்டத்தை, வன்முறை போராட்டமாக மாற்றுவதற்கு அரசு முயற்சி செய்து வருகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 










இந்நிலையில் அரசின் அடக்குமுறையை கண்டித்தும், அணு உலை போராளிகளுக்கு ஆதரவு தரும் வகையிலும் , சென்னை மதிமுக அலுவலகத்தில் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு 100 மணி நேரம் தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர். இதன் மூலம் இடிந்தகரை மக்கள் தனியாக இல்லை , அவர்களுக்கு துணையாக சென்னை மக்கள் இருக்கிறார்கள் என நிரூபிகிறார்கள் சென்னை அணு உலை எதிர்ப்பாளர்கள்   









[vuukle-powerbar-top]

Recent Post