நேற்று ரஷ்யாவின் புதிய ரக சுகோய் ஜெட்-100 பயணிகள் விமானம் ஒன்று இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 50 பயணிகளுடன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே காணாமல் போனது.
அந்த விமானம் ஜகார்த்தாவுக்குத் தெற்கே 40 மைல் தொலைவில் உள்ள சலாக் மலையில் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷிய விமானப்படையைச் சேர்ந்தவர்கள் ஹெலிகாப்டரில் சென்று கயிறு மூலம் மலையில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்கவும் சேதங்களை மதிப்பிடவும் இறந்தவர்களைக் கண்டுபிடிக்கவும் ஒரு குழு சென்றுள்ளது என்று இந்தோனேஷிய ஜனாதிபதி சுஷிலோ உதோயோனோ நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.