விமான போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், தங்களது பதவியை பயன்படுத்தி உறவினர்களுக்கு பல்வேறு விமான நிறுவனங்களில் வேலை பெற்று தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக துறையின் 2 கூடுதல் இயக்குநர்கள், விமான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பிரிவின் 3 இயக்குநர்கள் உள்பட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இவ்விவகாரங்களில் பணி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.