அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அணுஉலைக்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம் (படங்கள்)
கூடங்குளத்தில் அணு மின் நிலையத்திற்கு எதிராக கடந்த 8 மாத காலமாக உதயகுமார் தலைமையில் எழுச்சியுடன் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடைபெற்றது. திடீரென்று தமிழக அரசு அரச பயங்கர வாதத்தை கட்டவிழ்த்து விட்டு அணு உலை போராளிகளின் மேல் பல வழகுகளை போட்டது. ஆயிரக்கனக்கான பேர்கள் மீது தேசத் துரோக வழக்கு போட்டது. இதற்கு சர்வதேச மன்னிப்பு சபை கூட கடும் கண்டனங்களை பதிவு செய்யது. ஆனால் அரசு ஏற்கனவே சில உறுதி மொழிகள் வழங்கி இருந்தது. அதாவது போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறுதல், கூடங்குளம் அணு உலைகள் தொடங்குவதற்கு முன் பாதுகாப்பு ஒத்திகை செய்யவேண்டும், இந்திய ரஷ்யா உடனான ஒப்பந்தத்தை வெளியிடுதல் போன்ற நிபந்தனைகளை அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால் அரசு சொன்ன படி நடக்கவில்லை. அதனால் இன்று முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர் இடிந்தகரை மக்கள். சுமார் 25 தற்போது காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.