உலகம் செழுமை அடையவும் காற்று மாசுபடாமல் பாதுகாப்பதும் ஆசிய-பசிபிக் நாடுகள் வசம்தான் உள்ளன என்று உலக நாடுகள் வளர்ச்சி குழு இன்று தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியங்கள் காடுகளை அழித்து பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. இதனால் ஆங்காங்கே பல நாடுகளில் தட்பவெப்பநிலை மாறுபடுகிறது. பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான மாற்று வழிகள் ஏற்படுத்துதல், பசுமைப் பயிர்கள் வளர்த்தல், மரங்கள் வளர்த்தல் மூலம் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும்.
இதனால் சீதோஷ்ண நிலையில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.