ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தற்போது உற்சகட்ட சந்தோசத்தில் உள்ளார், அவர் இயக்கிய மலையாளப்படமான உறுமி அங்கு மிக பெரியளவில் வெற்றிபெற்றுள்ளது.அதனை தொடர்ந்து, அப்படத்தின் தமிழாக்கமான பதினான்காம் நூற்றாண்டு உறைவாள் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது.
தற்போது விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் சந்தோஷ் சிவன் அப்படம் பற்றி கூறியபோது,இயக்குனர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் ஆகியோருடன் கூட்டாக இணைந்து செயல்பட்டமை மிக சந்தோஷமாகவும்,திருப்தியாகவும் இருந்ததாக கூறினார்.
துப்பாக்கி படம் மிக அருமையாக வந்திருப்பதாகவும்,நிச்சயம் தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.
ஒளிப்பதிவாளராக சினிமாவில் பிரகாசித்த சந்தோஷ் சிவனின் இயக்குனர் பிரவேசம் மிக ஒளிமயமாக விளங்க அலை செய்திகளின் வாழ்த்துக்கள்.