தர்மபுரி நகரசபை கூட்டம் இன்று நகரசபை தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. அப்போது அனைத்து கட்சி கவுன்சிலர்களும் நகரத்தில் குப்பைகளை அகற்றுதல், கொசுமருந்து அடித்தல் சாக்கடையை சுத்தம் செய்தல் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றபடவில்லை என அமளியில் ஈடுபட்டனர். தலைவர் விரைவில் நிறைவேற்றபடும் என தெரிவித்தார்.
இதில் திருப்தி அடையாத கவுன்சிலர்கள் நகரசபை தலைவர் இருக்கையை சுற்றி முற்றுகையிட்டனர். நகரசபை தலைவர் கூட்டத்தை முடித்து கொண்டு வெளியே சென்றார். இதை தொடர்ந்து அனைத்து கட்சி கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.