அரியானாவில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் நலத்துறை, அலுவலகத்துக்கு வரும்போது டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. மரியாதையான உடைகளை அணிந்து வரவேண்டும் என்று தனது துறை ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மரியாதையான உடை என்பது ஆண்களுக்கு பேண்ட், சட்டையும் பெண்களுக்கு சல்வார் கமீஸ், சுடிதார் துப்பட்டா என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மரியாதையான என்கிற வார்த்தையால் பிரச்னைகள் ஏற்படலாம், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள் போன்று உடை அணிந்து வருவதற்காகத்தான் மரியாதையான என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று அரியானா சமூகநலத்துறை அமைச்சர் கீதா புக்கால் குறிப்பிட்டார்.