பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிலையில், இந்த நிதி உதவியை நிறுத்தும் வகையில், பாராளுமன்ற கமிட்டி ஒன்று புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.
இந்த மசோதாவில், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும் வரையில், அல்-கொய்தா, தலீபான், ஜெய்ஸ்-இ-முகமது, லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில், பாகிஸ்தானுக்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவி நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.