Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் ஜாமீன் மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சரும் தி.மு.க.வின் முக்கிய தலைவருமான ஆ. ராசா, இன்று ஜாமீன் கேட்டு டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவின் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்ததாக கைது செய்யப்பட்ட ராசா, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். 

இவருக்கு பிறகு கைதான தி.மு.க. எம்.பி. கனிமொழி கடந்த நவம்பர் மாதம் ஜாமீன் பெற்றார். இவரது டெலிகாம் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. ராசாவுக்கு மட்டும்தான் ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post