Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சிங்களக் கொடியை உயர்த்திப் பிடித்த தமிழினத் தலைவர் - உலகத் தமிழர்கள் கண்டனம்



சிங்களக் கொடியை உயர்த்திப் பிடித்த தமிழினத் தலைவர் - உலகத் தமிழர்கள் கண்டனம்.

யாழில் நேற்று எதிர்கட்சிகளின் ஒன்றிணைவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில், யாழில் மே தின நிகழ்வுகள் பிற்பகல் முதல் மாலை வரை பொதுக் கூட்டம் நடந்தது. 

இதன்போது உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன், இந்த நாட்டில் சகல இனங்களும் ஒற்றுமையாக இணைந்து வாழ முடியும் என்பதனை இன்று நடக்கும் மே நாள் காட்டியிருக்கின்றது. ஆனால் இதனை குழப்ப சிலர் முயற்சிக்கின்றனர். அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதேபோன்று அரசாங்கத்துடன் கடந்த ஒரு வருடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். ஆனால் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. எனவே இந்த அரசாங்கத்துடன் பேசி எந்த முடிவும் கிடைக்கப்போவதில்லை. 

இப்படி கூறிவிட்டு, அங்கிருந்து உயர்த்தப்பட்ட இலங்கையின் கொடி சம்பந்தரின் கைக்கு வந்தவுடன் எந்த வித தயக்குமும் இன்றி சம்பந்தர் அந்த கொடியை மகிழ்ச்சியுடன் அசைத்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வை காணொளி மூலமாக பார்த்த உலகத் தமிழர்கள் அதிர்ச்சி உற்றனர். சம்பந்தனரின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர் உலகத் தமிழர்கள். சமூக வலைத் தளங்கள் அவரை திட்டித் தீர்த்தன. 

சிறிலங்காவின் தேசியக் கொடியான வாளுடன் காணப்படும் சிங்கம் சிங்கள பேரினவாதத்தின் அடையாள சின்னமாகும். தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள பேரினவாத அடையாள சின்னமான சிங்க கொடியை எரித்ததற்காக எத்தனை இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எத்தனை இளைஞர்கள் சிறை சென்றனர். முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை கொன்றொழித்த சிங்கள இராணுவம் எந்த சிங்க கொடியை வெற்றிக் கழிப்போடு ஏற்றி வைத்ததோ அதே சிங்கள பேரினவாத சிங்க கொடியை இன்று ரணில் விக்கிரசிங்காவுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உயர்த்தி பிடித்திருப்பது கண்டு சிறிலங்காவில் அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழ் மக்களும், கல்லறைகளில் வாழும் மாவீரர்களும் கண்ணீர் வடித்திருப்பார்கள்.

தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கு இழுக்கு தேடும் வகையில் சம்பந்தன் நடந்து கொண்ட இச்செயல் தமிழ் இனத்தால் வரலாற்றில் மன்னிக்க முடியாததாகும். இந்த ஈனச்செயலை செய்த சம்பந்தன் ஐயா தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தலைமையாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உள்ளவரா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டது. இப்படியாக, சிங்களத்திற்கு விலை போன தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு கண்டனம் தெரிவித்து தமிழ் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

 
[vuukle-powerbar-top]

Recent Post