முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஒரு கூட்டத்தில் பேசுகையில் லோக்பால் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். லோக்பால் என்று சொல்லப்படும் ஊழல் ஒழிப்பு சட்டம், அரசு செயல்பாட்டிற்கு கொண்டுவந்தால் நாட்டில் உள்ள சிறைச் சாலைகள் தான் நிரம்பும். ஊழவாதிகள் அனைவரும் சிறை செல்ல நேரிடும். அதனால் என்ன பயன்? நம்மை பொறுத்த வரை யாரும் சிறைக்கு செல்ல வேண்டியது இல்லை , காரணம் நமக்கு நல்ல மனிதர்கள் தேவை. மேலும் சிறுவர்கள் ஊழலுக்கு துணை போக்கக் கூடாது என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார் . இவ்வாறு ஒவ்வொரு இல்லங்களிலும் இப்படி உறுதி எடுத்துக் கொண்டால் வெகு விரைவில் ஊழல் நாட்டை விட்டே ஓடிப் போய்விடும் , மனிதர்கள் சிறை செல்ல வேண்டிய அவசியமும் இருக்காது என கருத்து தெரிவித்துள்ளார். இதனால் அவர் சொல்ல விரும்புவது ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் தேவை இல்லை என்பது தான்.
ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டு வர போராடும் அன்னா ஹசரேவின் இயக்ககத்திற்கு அப்துல் கலாமின் இந்த பதில் சற்று கவலை அளிப்பதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இத்தகைய விமர்சனம் அவர்கள் எதிர்பாராத ஒன்று தான்.
எனினும் அப்துல் கலாம் மக்களுக்கு எதிரான பல கருத்துகளை இதற்கு முன்னும் கூறியிருக்கிறார். மீனவர்கள் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காதது, இனப் படுகொலை செய்த ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டது, கூடங்குளம் போராளிகளின் கருத்தை கேட்கலாமல் அணு உலைகள் பாதுகாப்பானது எனச் சொன்னது போன்ற பல விடயங்கள் மக்களின் மனதில் எதிர்பலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.