வன்னி இராணுவ நடவடிக்கையில் இறுதி சில மாதங்களில் துரதிர்ஷ்டவசமாகப் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பான் கீ மூன், இந்தியா ரூடேக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தனது செவ்வியில் மேலும் குறிப்பிட்டதாவது:
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் வலுவான அரசியல் அதிகாரம் உள்ள நிலையில், கூடிய விரைவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற கடினமான வழியை இலங்கை மேற்கொண்டதை நான் மதிக்கின்றேன். ஆனால் இராணுவ நடவடிக்கையில் இறுதி சில மாதங்களில் துரதிஸ்டவசமாக பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொலலப்பட்டனர்.
மனித உரிமைகள் மிக மாசமாக மீறப்பட்டன. இந்த விவகாரம் குறித்துப் பொருத்தமான சமூக அரசியல் வழியில் பதிலளிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் நான் கேட்டுக் கொண்டேன்.
நான் ஒரு நிபுணர் குழுவை நியமித்தேன். அனைத்துலக சமூகத்திடமிருந்து எழுந்த பலமான கோரிக்கைகளையடுத்து இலங்கை அரசும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. அது நல்ல பரிந்துரைகளைச் செய்தது.
இலங்கை ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். இலங்கை ஜனாதிபதி மகிந்த அவர் பலமான ஆணையைக் கொண்டுள்ளார். முழுமையான பொறுப்புக் கூறும் பொறிமுறை மிக விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்றார் பான் கீ மூன்.