தொடருந்து நிலைய நடைமேடை கட்டணம் ரூ. 5 : இன்று முதல் அமல்
நாடு முழுவதும் உள்ள தொடருந்து நிலையங்களில் நடைமேடை சீட்டின் விலை விலை ரூ. 5 அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள தொடருந்து நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ரூ. 3 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. நடந்து முடிந்த பராளுமன்ற ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதன்படி ரூ.3 லிருந்து ரூ.5 ஆக அதிகரிக்க நடுவண் தொடருந்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று முதல் அந்த உத்தரவு அமலக்கு வருகிறது.