கடந்த 2010 ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் போது பல்வேறு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் 5 ஸ்டேடியங்களில் அமைக்கப்பட்ட சிந்தட்டிக் பாதை அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாக புதிய வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.
கொல்கத்தா, சிலிகுரி, என்.சி.ஆர். உள்ளிட்ட 20 இடங்களில் சி.பி.ஐ சோதனை மேற்கொண்டுள்ளனர். 30 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.