Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகளை இனப்படுகொலையாக அறிவியுங்கள்; ஹிலாரிக்குத் தொலைநகல்கள்




முள்ளிவாய்க்கால் படு கொலைகளின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, முள்ளிவாய்க் காலில் நிகழ்ந்த படுகொலைகளை இனப் படுகொலையாக அங்கீகரித்தும், வன்னி மக்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன்னுக்கு தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மே 18 நினைவு நாள் அமெரிக்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்தத் தொலைநகல் அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர சுபா சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

ருவாண்டா படுகொலைகளின் 19ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்மையில் ஹிலாரி கிளின்ரன், அங்குள்ள மக்களுக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைநகலைக் ஹிலாரி கிளின்ரனின் தொலைபேசி இலக்கங்களுக்கும் அதன் பிரதியை வெள்ளை மாளிகைக்கும், சாத்தியமிருந்தால், புலம்பெயர் தமிழர்கள் தாம் வதியும் நாட்டின் அரச தலைமைக்கும் அனுப்புமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கீழ் உள்ள கடிதத்தை தொலைநகலில் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

ஹிலாரி கிளின்ரனின் தொலைநகல் இலக்கங்கள் 1-202-647-1579 அல்லது 1-202-647-2283, வெள்ளை மாளிகைக்கான பிரதி அனுப்ப வேண்டிய தொலைநகல் இலக்கம் 1-202-456-2461.

[vuukle-powerbar-top]

Recent Post