நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநிலங்களின் 83 மாவட்டங்களுக்கு அவற்றின் பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்காக மத்திய அரசு ரூ.415 கோடி ஒதுக்கீடு செய்தது. தற்போது புதிதாக பீகார், சத்தீஷ்கார், ஜார்கண்ட், மேற்குவங்காளம், ஒடிசா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் மேலும் 20 மாவட்டங்கள் நக்சலைட் பாதிப்பு உள்ளவையாக மத்திய அரசால் கண்டறியப்பட்டு உள்ளன.
எனவே, இந்த 20 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 103 மாவட்டங்களுக்கு ரூ.415 கோடி பாதுகாப்பு செலவினமாக ஒதுக்கப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சக பாதுகாப்பு குழு தெரிவித்து உள்ளது.