Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

உலங்கு வானுர்தி விபத்தில் சிக்கிய ஜார்கட் முதல்மந்திரிக்கு தீவிர சிகிச்சை



ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியதில் ஜார்கண்ட் முதல்-மந்திரி காயத்துடன் தப்பினார். அவருடன் பயணம் செய்த மனைவி உள்பட 3 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பா.ஜனதாவைச் சேர்ந்த அர்ஜ×ன் முண்டா, முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள சரேகேலா கார்சவான் மாவட்டம் குச்சாய் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அர்ஜ×ன் முண்டா ஒரு ஹெலிகாப்டரில் சென்றார்.

அவருடன் அவர் மனைவி மீரா முண்டா, பா.ஜனதா எம்.எல்.ஏ. பத்குன்வார் கக்ராய், முதல்-மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி எம்.கே.சிங் ஆகியோரும், 2 விமானிகளும் சென்றனர்.

குச்சாய் விமான நிலையத்தில், அந்த ஹெலிகாப்டரை தரை இறக்க முடியவில்லை.

எனவே, ராஞ்சிக்கே திரும்பி விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரை இறக்க முயன்றபோது, அங்கும் தரை இறக்க முடியவில்லை.

ஹெலிகாப்டரை வலுக்கட்டாயமாக தரை இறக்க முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 30 அடி உயரத்தில் இருந்து, ஓடுபாதையில் ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. நேற்று பகல் 12.25 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது.

இந்த விபத்தில், முதல்-மந்திரி அர்ஜ×ன் முண்டா காயம் அடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடைய மனைவி, பா.ஜனதா எம்.எல்.ஏ., பாதுகாப்பு அதிகாரி, 2 விமானிகள் உள்ளிட்ட 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

அர்ஜ×ன் முண்டா, அவர் மனைவி உள்ளிட்ட 6 பேரும் உடனடியாக ராஞ்சியில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அர்ஜ×ன் முண்டாவின் தலை மற்றும் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டிருந்தது.

இதுதொடர்பாக முதல்-மந்திரியில் முதன்மை செயலாளர் டி.கே.திவாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரிக்கு தலை மற்றும் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. என்றபோதிலும் அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காயம் ஏற்பட்ட பகுதியில் ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு திவாரி கூறினார்.

விபத்தில் காயம் அடைந்த அனைவரது உடல்நிலையும் நல்லநிலையில் இருப்பதாகவும், படிப்படியாக குணம் அடைந்து வருவதாகவும் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு பி.டி.சின்கா தெரிவித்தார்.

அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நரம்பியல் நிபுணர் சஞ்சய் குமார் கூறியதாவது:-

விபத்தில் சிக்கிய 6 பேருக்குமே அவர்களது உடலின் பின்பகுதியில் தான் காயம் ஏற்பட்டு இருக்கிறது. சற்று உயரமான பகுதியில் இருந்து கீழே விழுந்ததால் இந்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. முதல்-மந்திரி அர்ஜ×ன் முண்டாவுக்கு கழுத்து மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி மற்றும் அவரது மனைவியை தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறோம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தொடர்பான அறிக்கை வந்த பிறகு தான் அவர்களை வீட்டுக்கு அனுப்புவது பற்றி முடிவு செய்வோம்.

இவ்வாறு சஞ்சய் குமார் தெரிவித்தார்.

மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் பற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் ஹெலிகாப்டரும் சேதம் அடைந்துள்ளது. அதன் இறக்கைகள் உடைந்து விட்டன. ஹெலிகாப்டர், ஓடுபாதையில் நின்று கொண்டிருப்பதால், அங்கு விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் அகஸ்டா ஏ.டபிள்ï 109 என்ற ரகத்தை சேர்ந்தது. 20 ஆண்டு பழமையான இந்த ஹெலிகாப்டர் மும்பை நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு பெறப்பட்டு இருந்தது.
[vuukle-powerbar-top]

Recent Post