உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிலாகுவா என்ற இடத்தில் ஒன்றரை மாதப் பெண் குழந்தையை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்றதாக அந்தக் குழந்தையின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

எதிர்காலத்தில் அந்தக் குழந்தை கடும் நோயினால் பாதிக்கப்படும் என்று ஒரு சாமியார் கூறியதைக் கேட்டு குழந்தையை உயிரோடு கொல்ல முயன்றிருக்கின்றனர். போலீசார் சாமியாரைத் தேடி வருகின்றனர்.