Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நூலிழையில் உயிர் தப்பிய ஆதி மற்றும் லக்ஷ்மி மஞ்சு.



மறந்தேன் மன்னித்தேன் படத்திற்கான படப்பிடிப்பு சின்சினதா கிராமத்தின் கோதாவரி ஆற்றங்கரையில் நடைபெற்று வருகிறது.இதில் நடிகர் ஆதி மற்றும் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகளான லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துகொண்டுள்ளனர்.

படத்தின் ஒரு பகுதியாக ஆதி மற்றும் லக்ஷ்மி மஞ்சுவை வெள்ளம் அடித்து செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுகொண்டிருந்தது அக்காட்சியை தத்துருவமாக எடுக்க நினைத்த இயக்குனர், கோதாவரி ஆற்று நதிக்கரையில் சுமார் 21 ஏக்கர் நிலப்பரப்பில் 170 மீனவ குடில்கள் அமைத்து, 250 தொழில்நுட்பக் கலைஞர்களுடன் 20 ஒளிப்பதிவு கருவி கொண்டு அக்காட்சியை பதிவு செய்துகொண்டிருந்தார்.

அக்காட்சியின் முக்கிய கட்டத்தில், அம்மீனவ கிராமத்துக்குள் கோதாவரி ஆற்று நீரை சுமார் ஆறு வாயில்கள் ஊடாக உட்புகச் செய்ய வேண்டும்.அவ்வாறே சுமார் நள்ளிரவு 12 :45 மணிக்கு ஆதி மற்றும் லக்ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென அதிகரித்த வெள்ளத்தால் இருவரும் 400 அடி ஆழத்தில் கோதாவரி ஆற்றை நோக்கி அடித்து செல்லப்பட்டனர்.இதனைக் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர் இருவரையும் மிக சிரமத்தின் மத்தியில் காப்பாற்றி கரை சேர்த்தார்.

உயிராபத்து இன்றி தப்பிய இருவரும் சில மணி நேரத்தின் பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

மறந்தேன் மன்னித்தேன் படத்தை குமார் நாகேந்திரா இயக்குகிறார்.லக்ஷ்மி மஞ்சு இப்படத்தை தயாரிக்கிறார்.ஆதி மற்றும் தாப்சி ஆகியோர் இப்படத்தில்  நடிக்கின்றனர்.


[vuukle-powerbar-top]

Recent Post