492 இலங்கையர்களை ஏற்றியவாறு பிரிட்டிஷ் கொலம்பியா வழியாக கனடாவைச் சென்றடைந்த எம் வி சன் சீ கப்பலில் இருந்து மேலும் இருவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் ஒருவரையும் புலிகள் இயக்கத்தில் ஆயுதப்பயிற்சி பெற்றதான குற்றத்தில் மற்றுமொருவரையும் நாடு கடத்துமாறு கனேடிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சன் சீ கப்பலில் சென்ற 19 பேர் இதுவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.