Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்



பிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.

சஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.

படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.

இந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.

இந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம்.
[vuukle-powerbar-top]

Recent Post