சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பேசும்போது, சமூக நலம் மற்றும் சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் நாட்டிலேயே முதல் முறையாக மாற்று திறனாளி குழந்தைகளுக்காக மாநில வள மையம் ஒன்று ஏற்படுத்தப்படும்.
இதற்காக பல்வேறு துறைகளில் இருந்தும் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் மையத்தின் சிறப்பு மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றார்.
மேலும், அவர்களது படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக கோயம்புத்தூரில் மாவட்ட மைய நூலகம் ஒன்றும் முதற்கட்டமாக அமைக்கப்படும்.
பின்னர் இது படிப்படியாக மற்ற இடங்களிலும் அமைக்கப்படும் என்றார். இதற்காக அரசு ரூ.41 கோடி ஒதுக்கியுள்ளது என்றும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.