புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஜூன் 12 தேதி இடம்பெறும் நிலையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் புதுகோட்டையில் வாகனம் ஒன்றில் இருந்து 5 இலட்சம் ரூபாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தேர்தல் விதிமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டையில் சோதனையிடும் போது ஓர் வாகனத்தில் 5 இலட்சம் ரூபாய் இருந்தது.
காவல்துறை அவர்களிடம் அந்த பணத்துக்கான ஆவணங்கள் கேட்டபொழுது அதற்கு தகுந்த ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் கைப்பற்றப்பட்டது.
இது வரைக்கும் காவல்துறை 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் என்றாலே மக்களை பணம் கொடுத்து வாங்கிவிடுகின்றனர் அரசியல் வாதிகள். இது ஆளும் மற்றும் எதிர் கட்சிகளிலும் நடைபெறுவதுதான் ஒரு பெரும் கொடுமை.