நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தமிழ் திரையுலக நட்ச்சத்திரங்களான சினேகா, பிரசன்னா திருமண நிகழ்வு நாளை அதாவது,11 ஆம் தேதி மிக விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.நடிகை சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இறுதியாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.
தமிழ் சினிமா இரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக,நாளை நடைபெறவுள்ள இவர்களது திருமண நிகழ்வுகளை விஜய் தொலைக்காட்சி மே மாதம் 20 ஆம் தேதி ஒளிபரப்பவுள்ளது.இதற்காக பல கோடிகளை கொடுத்து அவர்கள் திருமண நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தை பெற்றுள்ளது விஜய் தொலைக்காட்சி.
விஜய் தொலைக்காட்சியானது, பல திரையுலக நட்சத்திரங்களின் திருமண நிகழ்வுகளை 'நம்ம வீட்டு கல்யாணம்" என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒளிபரப்பி எண்ணற்ற தமிழ் இரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாளை திருமண பந்தத்தில் இணையவுள்ள சினேகா மற்றும் பிரசன்னா இருவுக்கும் அலை செய்திகள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.