Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கனிமொழி கொடுத்த மனு இன்று விசாரணைக்கு ! தீர்க்கமான முடிவு கிடைக்குமா ?



2 ஜி வழக்கில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகும் கனிமொழி மிகுந்த கவலைக்கு மத்தியில் நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக வழக்கு மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு எதிராக இருக்கக்கூடிய அனைத்து குற்றச்சட்டுகளையும் நீக்குமாறு கொடுத்திருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி திமுக எம்.பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் சரத் குமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

இது குறித்து கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தவறான புரிந்து கொள்ளல் காரணமாகவும், ஆராயப்படாத ஆவணங்களின் அடிப்படையிலும் எனக்கு எதிராக குற்றச்சாட்டை பதிவு செய்ய டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் 2011 அக்டோபர் 23ம் தேதி சிபிஐக்கு அனுமதி அளித்தது தவறு.

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், அந்தத் தொலைக்காட்சியில் 20 சதவீத பங்குகளை மட்டும் நான் வைத்திருந்தேன். முக்கிய முடிவுகளை எடுக்கும் இயக்குநர்கள் குழு கூட்டத்தில்கூட கலந்து கொண்டதில்லை.

எந்த உடன்பாட்டிலும் நிதிப் பரிவர்த்தனையிலும் கையெழுத்திட்டதில்லை. ஆனால், பொருந்தாத சட்டப்பிரிவுகளின்படி சிபிஐ பதிவு செய்த வழக்கில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.

இதேபோல், சரத் குமாரும் சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தனது மனுவில் கோரியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post