குரோம்பேட்டையை அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் செந்தில் (வயது 35), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்று இருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம ஆசாமிகள் செந்திலின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்து இருந்த 30 சவரன் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.