ஆண்டிப்பட்டியில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவியின் தந்தை பாண்டியன் ஆண்டிப்பட்டி போலீஸில் புகார் செய்தார். இதை அடுத்து விசாரணை நடத்திய போலீஸார் கருப்பசாமியைக் கைது செய்தனர்.

போலீஸ்காரருக்கு அடைக்கன்பட்டியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கருப்பசாமி மாணவியிடம் திண்டுக்கல்லுக்கு அழைத்து செல்கிறேன், அங்கு பல சுற்றுலா இடங்களை காண்பிக்கிறேன் என கூறி திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புக்கு அழைத்து வந்தார். அங்கு திவ்யாவை 3 நாட்கள் அறையில் பூட்டி கற்பழித்தார். இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.