Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாகிஸ்தானில் இந்துக் கோயில் இடிப்பு: சுற்றுப்பகுதிகளில் கடும் பதற்றம்!

கோயில் இருந்த இடம்
பாகிஸ்தானில் கராச்சி நகரிலுள்ள சோல்ஜர் பஜார் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் பிர் மந்திர் என்ற இந்து கோவில் இருந்தது. அதை சுற்றி ஏராளமான இந்துக்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறி நிலத்தின் உரிமையாளர் நேற்று திடீரென்று புல்டோசர் மூலம் கோவில் மற்றும் பல வீடுகளையும் இடித்து தள்ளி விட்டனர்.

கோயில் மற்றும் வீடுகளை இடித்தது பகை உணர்வின் வெளிப்பாடு என அப்பகுதி மக்கள் கூறினர். வீடுகள் இடிக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டதாகவும் இந்துக்கள் குற்றம் சா‌ற்‌றியுள்ளனர். 

இதனால் வீடுகளை இழந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுந்த நடவடிக்கை ஏதும் இதுவரை பாகிஸ்தான் எடுக்காததால், தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. மசூதியை இடித்தால் நீங்கள் பேசாமல் இருப்பீர்களா? என கேள்வி எழுப்பும் பதாகைகள் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.


[vuukle-powerbar-top]

Recent Post