Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி நண்பர் வீட்டில் சோதனை

செம்மண் குவாரி முறைகேட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நண்பரும் குவாரி நிர்வாகியுமான சதானந்தம் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டையிலுள்ள சதானந்தம் வீட்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

சோதனையின்போது, அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளியது குறித்த ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்ததாக தெரிகிறது.

பொன்முடியின் நண்பரான சதானந்தம், விழுப்புரம் மாவட்டம் பூந்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியை நிர்வகித்து வந்தார். இந்த குவாரி, பொன்முடியின் மகன் கெளதம சிகாமணியின் பெயரில் உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post