அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விளை நிலங்களின் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம், 29 ஆயிரத்து 387 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைகை அணையிலிருந்தும், வரும் 9-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடும்படி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
தேனி மாவட்டத்திலுள்ள மற்றொரு அணையான பெரியார் அணையிலிருந்தும் வரும் 9-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. அதன் மூலம், 5ஆயிரத்து 146 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பலியான இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ 5லட்சம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.