Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கரை தட்டிய கப்பலின் மாலுமிகளிடம் காவல்துறை விசாரணை

நீலம் புயல் தாக்கத்தால், சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தரை தட்டிய பிரதிபா காவிரி சரக்குக் கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகளிடம், சென்னை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மேலும், கப்பலின் உரிமையாளர் சுனில் பவாரிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கப்பலுக்குள் சோதனை நடத்த அனுமதி கேட்டு கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளனர். இந்த அனுமதி கிடைத்தால் சோதனையின் மூலம் முக்கியத் தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

புயல் வீசிய தினத்தன்று உதவி கேட்டு சென்னை துறைமுகத்திற்கும், கடலோர காவல்படைக்கும் தகவல் கொடுத்ததாக கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இத்தகவலை துறைமுக நிர்வாகமும், கடலோர காவல்படையும் மறுத்துள்ளன. எனவே, கப்பலில் சோதனை நடத்துவதன் மூலம் அன்றைய தினத்தில் நடைபெற்ற தகவல் பரிமாற்றம் குறித்த விவரங்கள் வெளிப்படும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
[vuukle-powerbar-top]

Recent Post