தனுஷ்கோடிக்கும் – கச்சத்தீவிற்கும் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. வலைகள் படகுகளையும் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதல் தொடர்ந்ததால், மீனவர்கள் வெறுங்கையோடு கரைக்கு திரும்பினர்.
நீலம் புயல் காரணமாக, கடந்த ஒரு வாரமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் சனிக்கிழமை மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 645 விசைப்படகுகளில் அவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால், மீன் பிடிக்காமலேயே கரைக்கு திரும்பியுள்ளதால், பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.