Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

விஜயகாந்த்திற்கு எதிராக பத்திரிகையாளர்கள் நூதன போராட்டம்

சென்னை விமான நிலையத்தில் தேமுதிகவினரால் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு ஊதியம் கொடுக்கும் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இதில் கலந்து கொண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

கடந்த சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில், பத்திரிகையாளுடன் நடைபெற்ற வாக்குவாதத்தில் விஜயகாந்த், அவர்களை திட்டியதைக் கண்டிக்கும் வகையில், அவருக்கு ஊதியம் அளிக்க தாங்கள் முன்வந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
[vuukle-powerbar-top]

Recent Post