கொழும்பில் காணாமற்போன, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் நானுஓயாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தங்க ஆபரண வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது 53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்தமாதம் 30ம் நாள் சுமார் 30 இலட்சம் ரூபா பணத்துடன் இவர் கொழும்பு செட்டியார் தெருப் பகுதியில் காணாமற்போயிருந்தார்.
நானுஓயாப் பகுதியில் இவரது சடலத்தை நேற்று முன்தினம் இலங்கை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
எனினும் இன்றைய தினமே அது காணாமற்போனவருடையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தச் சடலம் காணாமற்போன, தனது சகோதரியின் கணவரான சின்னத்துரை இந்திரேஸ்வரனுடையது என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அடையாளம் காட்டியுள்ளார்.
பணத்துக்காக கடத்திச் செல்லப்பட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போர் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் செட்டியார் தெரு தமிழ் ஆபரண வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வந்தன.
கப்பம் கொடுக்க மறுத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், இந்தச் சம்பவம் செட்டியார் தெரு தமிழ் வர்த்தகர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.