
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பல ஆண்டு காலம் மியான்மரில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவருமான ஆங் சான் சூகி கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லி வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு டெல்லியில் வாழும் பர்மிய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் டெல்லி வந்துள்ள ஆங்சான் சூகி ஒரு வார காலம் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்த பயணத்தன் போது மியான்மரில், ஜனநாயக ஆட்சி ஏற்படுத்துவது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்த உள்ளார். மேலும் இரு நாடுகளுக்கு இடையோன நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளார்.
தனது அரசியல் பயணங்களுக்கிடையே, நாளை ஜவர்ஹலால் நேரு நினைவு சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.
அப்போது அவருக்கு ஜவர்ஹலால் நேரு சர்வதேச விருது வழங்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கும் ஆங்சான் சூகி வரவுள்ளார். ஆந்திர மாநிலத்திலுள்ள கிராமங்களுக்கு செல்லும் ஆங்சான் சூகி, அங்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்களை பார்வையிடுகிறார்.
இந்தியாவில் மேற்கொள்ளும் வளர்ச்சி திட்டங்களை மியான்மரில் செயல்படுத்தும் சாத்திய கூறுகளை பற்றியும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.