அமெரிக்க இராணுவத்தில் தமிழ்மொழித் தேர்ச்சி பெற்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்ரகன் அறிவித்துள்ளது.
சிறப்பு மொழித்தேர்ச்சி அடிப்படையில் அமெரிக்காவில் தற்காலிகமாக வசித்து வரும் 550 பேரை முதற்கட்டமாக அமெரிக்க இராணுவம் சேர்த்துக் கொள்ளவுள்ளது.
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பேசக்கூடியவர்கள் இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தமிழ், ஹிந்தி, அரபி, சீன, இக்போ, குர்திஸ், நேபாளி, பாஸ்ரோ, ருஸ்ய மொழிகள் உள்ளிட்ட 35 மொழிகளைப் பேசுவோர் இவ்வாறு அமெரிக்க இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளனர்.
இவர்கள் 10 வாரகால அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர், பணிகளில் அமர்த்தப்படுவர்.
இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியிருந்தவர்கள் அமெரிக்க இராணுவத்தில் சேரமுடியும்.
இவர்களுக்கு நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.
இந்த முன்னோடித்திட்டம் வெற்றியளித்தால், இராணுவத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று பென்ரகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவத்தில் தற்போது 29,000 வெளிநாட்டவர்கள் பணியாற்றுகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.