Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம்

சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது இன்று வழங்கப்பட்டது.

சர்வேதேச மட்டைப்பந்தாட்ட விளையாட்டில் சிறந்த வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது.இன்று புது டில்லியில் ஆஸ்திரேலியாவின் கலை மற்றும் பிராந்திய அமைச்சர் இந்த விருதினை சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்தியாவின் சோலி சொராப்ஜிக்கு பின்னர் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விருதை சச்சினுக்கு வழங்குவதை ஆஸ்திரேலியா நாட்டில் சிலர் எதிர்த்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post