Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தங்கத்தின் விலை இன்று கடும் உயர்வு

தங்கத்தின் விலை இன்று கடும் உயர்வைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி முதலீட்டுக்கான 24 காரட் தங்கம் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 59க்கு விற்கப்படுகிறது.

ஆபரணத் தங்கம் கிராமுக்கு 36 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 896க்கு விற்பனையாகிறது. இதனால், நேற்று காலை விலையோடு ஒப்பிடும்போது, ஆபரணத் தங்கம் ஒரே நாளில் 288 ரூபாய் அதிகரித்து, சவரன் ஒன்று 23 ஆயிரத்து 168 ரூபாயை எட்டியுள்ளது. மறுபுறம், வெள்ளியின் விலையிலும் ஏற்றம் தெரிகிறது.

1 கிலோ பார் வெள்ளி, ஆயிரத்து 10 ரூபாய் அதிகரித்து, 58 ஆயிரத்து 885க்கும், சில்லறை விற்பனையில், ஒரு கிராம் வெள்ளி 63 ரூபாய்க்கும் கைமாறி வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இழப்பே, இன்றைய விலையேற்றத்துக்கு முக்கிய காரணமாகச் கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post