Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் தமிழரை ஓட ஓட தாக்கி வட இந்தியர்கள் அட்டூழியம். மூன்று தமிழர்கள் கைது


 நாம் தமிழர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே அதிர்ச்சியில் 



வட சென்னையில் தமிழர் ஒருவரை தாக்கி வட  இந்தியர்கள் அட்டூழியம். மூன்று தமிழர்கள் கைது.

இன்று காலை சென்னை புறநகர் மாதவரம் பகுதியில் இயங்கிவரும் அடுமனை பண்டங்கள் தயாரிக்கும் (பிஸ்கட்) நிறுவனத்தில் (நியு சகாரா பேக்கரி)  பணி புரியும் சில வட இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டும் கற்களை வீசி கொண்டும் விளையாடி கொண்டிருந்தனர், அப்போது அப்பகுதியில் வசிக்கும் மாதவரம் பகுதியின் நாம் தமிழர் கட்சி செயலாளர் தமிழ் பிரபு அவர்களின் மகிழுந்துவின் மேல் கற்கள் பட்டது. இதனால் தமிழ் பிரவு விளையாடிய வடநாட்டவர்களை கண்டித்துள்ளார். இதை பார்த்தவுடன் அந்த பிஸ்கட் நிறுவனத்தின் சொந்தக்காரரின் மகன் நியாயம் கேட்க வந்த தமிழ் பிரபுவை அடித்துள்ளார். இவரும் திருப்பி அடிக்க முயன்றுள்ளார் . உடனே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் தமிழ் பிரபுவை சரமாரியாக தாக்க துவங்கினர் . இரும்புக் கம்பியை கொண்டும் தாக்கி உள்ளனர் வட  இந்தியர்கள். இதனால் தமிழ் பிரபுவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது . உயிரை காப்பாற்ற அவர் ஓடியபோது விடாமல் துரத்தித் துரத்தி அடித்துள்ளனர் ஹிந்தியர்கள் . பின்பு அந்த பகுதியில் சேர்ந்த சிலர் தமிழ் பிரவுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் பேர் அடுமனை பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்று அடித்தவர்களை கண்டிக்க சென்றுள்ளனர். அங்கு ஹிந்தியர்கள் திமிராக பேசியதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது . இதில் வட இந்தியர் ஒருவரை தாக்கியதோடு நிறுவனத்தில் உள்ள கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர் நாம் தமிழர்கள். இதனால் பிஸ்கட் நிறுவன அதிபர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த உடன் காவல்துறை ஆய்வாளர் எந்த தொடர்பும்  இல்லாத  'நாம் தமிழர்' கட்யியை சேர்ந்த தமிழினியன், சதீஸ்குமார், சங்கர் ஆகிய  மூன்று பேர்களை  கைது செய்துள்ளார். அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் தமிழ் பிரபுவின் மேலும் வழக்கு தொடுத்துள்ளார் காவல் நிலைய ஆய்வாளர்.  

தமிழ் பிரபுவின் சார்பில் வட இந்தியர்கள் மீது நாம் தமிழர்கள் புகார் கொடுக்கவே , காவல்துறை யாரோ 3 வட இந்திய சிறுவர்களை கைது செய்துள்ளது . நிறுவன அதிபரின் மகனை கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர்கள் வலியுறுத்தவே, ஆய்வாளர் சொன்னது ' நீங்கள் சொல்லும் நபரை எல்லாம் நான் கைது செய்ய முடியாது' என திமிராகவும் ஹிந்தியர்களுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளதாக தெரிகிறது . பிஸ்கட் நிறுவன அதிபர் காவல்துறை ஆய்வாளருக்கு கையூட்டு கொடுத்து தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுக்கும்படி சொல்லியுள்ளார் என்று நாம் தமிழர்கள் உறுதியாக குற்றம் சாட்டுகின்றனர். 

தற்போது தமிழின உணர்வாளர்கள் மாதவரம் காவல் நிலையத்தில் குவிந்து தவறு செய்த ஹிந்தியர்கள் மற்றும் பிஸ்கட் நிறுவன அதிபரின் மகனை கைது செய்ய வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர்களை மதிக்காமல் செயல் படும் ஆய்வாளர் தெலுங்கர் என அறிய முடிகின்றது . அதனால் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட மறுக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது . பாதிக்கப்பட்ட தமிழர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர் . தமிழ்நாட்டில் தமிழருக்கு நீதி கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனர் . எனினும் இந்த விடயத்தில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவது என முடிவெடுத்துள்ளனர் தமிழர்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post