Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலண்டனில் தொடங்கியது உலகத் தமிழர் மாநாடு (படங்கள்)


இலங்கைத் தீவில் நடைபெற்ற இன அழைப்பின் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரனை ஒன்று ஆரம்பிக்கபடவேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடு தற்போது லண்டன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

மூன்று நாட்கள் தொடர்ந்து பல அமர்வுகள் மூலம் நடைபெறப்போகும் இந்த மாநாட்டை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பிரித்தானிய பாராளுமன்ற குழுத்தலைவர் திரு . லீஸ் கொட் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் அனுசரனையோடு நடைபெறும் மாநாட்டில் உலகப்பரப்பில் பரந்து வாழும் பெரும்பாலான அனைத்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்கள்.

இம்மாநாட்டை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றார்கள். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் நாட்டு பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்து சிறப்பித்ததோடு , ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்கு நன்றிகளை தெரிவித்தனர்.

அவர்களின் சிறப்பு செய்தலை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு பாடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆரம்ப வைபவத்தை தொடர்ந்து , தீர்மானம் பற்றிய விவாதமும் இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான விவாதமும் ஆரம்பமாக உள்ளது.


இந்த மாநாட்டில் ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க  காரணமான திமுக வும் கலந்து கொண்டது  குறிப்பிடத் தக்கது. 









[vuukle-powerbar-top]

Recent Post