Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கட்கரி பதவி விலகுவதே கட்சிக்கு நல்லது ~ ராம்ஜெத் மலானி

ஊழல் புகார் மற்றும் சர்ச்சைகளில் சிக்குவதில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எந்த வகையிலும் சளைக்காதவர் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார் பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி. இவருக்கு எதிர்க்கட்சிகள் தவிர, சொந்த கட்சியிலும் எதிர்ப்பு வலுத்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பதவி விலகுவதே கட்சிக்கு நல்லது.. இந்நிலையில், டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராம்ஜெத் மலானி, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கட்கரி பதவி விலகுவதே கட்சிக்கு நல்லது, அவருக்கும் நல்லது என தெரிவித்திருக்கிறார்.

உட்கட்சி நெருக்கடி : நிதின் கட்கரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும்வரை பாரதிய ஜனதா கட்சியில் அவ்வளவு பிரபலம் இல்லாதவர். இந்த நிலையில் கட்கரி மீது சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் அடுக்கடுக்கான புகார்களை சுமத்த, அது தற்போது உட்கட்சி பூசலை ஏற்படுத்தியிருக்கிறது.

நிதின் கட்கரி தலைவர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து செயற்குழுவில் இருந்து விலகியுள்ள மகேஷ் ஜெத்மலானி, ஊழல் புகாரில் சிக்கிய கட்கரிக்கு பதவியில் நீடிக்க தார்மீக உரிமையில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

மேலும் நிதின் கட்கரியை நீக்குமாறு கட்சியின் மற்ற தலைவர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் உட்கட்சிப் பிரச்சனையை கட்சி நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தெரிவிப்பது முறையல்ல என கண்டனம் தெரிவித்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

மாற்றுக்கருத்து இருந்தால் அதனை கட்சித் தலைவருக்கு தெரிவிப்பதே சரியான செயல் என்றும் அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post