Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அலைபேசியில் தொல்லைதரும் விளம்பர குறுஞ்செய்திகளை தடுக்க புதிய அறிவிப்பு

அலைபேசியில் தொல்லைதரும் விளம்பர குறுஞ்செய்திகளை தடுக்க தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொலைபேசி விளம்பர நிறுவனங்கள் ஒரு சிம்கார்டில் இருந்து, ஒரு நாளில், சலுகைக் கட்டணத்தில் 100 குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்ப முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக ட்ராய் அமைப்பின் முதன்மை ஆலோசகர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

100க்கு மேல் அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்திகளுக்கும் தலா 50 காசு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், தொல்லை குறுஞ்செய்திகள் அனுப்புவது குறையும் என்று நம்புவதாக கூறிய பரமேஸ்வரன், இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

எனினும், வாடிக்கையாளர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை என்று கூறிய அவர், டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடு 15 நாட்களில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post