Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாகையில் விளைநிலங்களில் எண்ணெய் கசிவு - மூன்று ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இயலாது

நாகை மாவட்டத்தில் விளைநிலங்களில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் மூன்று ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 


நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் அடியக்கமங்கலம் பகுதியில் இருந்து நரிமணத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் இருந்த 20 ஏக்கர் அளவிலான விலை நிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் இன்று பார்வையிட்டார்.

இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய இய்லாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார்.மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post