புதிய கட்சியை தொடங்க முடிவு செய்துள்ள கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, இன்று தனது ஆதரவாளர்களுக்கு விருந்து வைக்கிறார்.
மதிய உணவுக்கு வருமாறு ஆளும் பாரதிய ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.
டிசம்பர் 10ஆம் தேதி புதிய கட்சியை தொடங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள எடியூரப்பா, இன்றைய விருந்தின்மூலம் தனது ஆதரவாளர்கள் யார் யார் என்பதை அறிய திட்டமிட்டுள்ளார்.
மேலும் புதிய கட்சியின் தொடக்கவிழாவை ஹவேரி என்ற இடத்தில் நடத்த முடிவு செய்துள்ள எடியூரப்பா, அதுதொடர்பாகவும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசிக்க இருக்கிறார்.
இதனிடையே அதிருப்தியிலுள்ள எடியூரப்பா மற்றும் அமைச்சர்களுடன் பேச்சு நடத்த பாரதிய ஜனதா மேலிடப் பிரதிநிதி தர்மேந்திர பிரதான் கர்நாடகா விரைந்துள்ளார்.