தொடர்வண்டி பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பவன்குமார் பன்சால் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
தொடர்வண்டியில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியான பயணத்தை கருத்தில் கொண்டு பயணச்சீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார்.இருப்பினும் கட்டண உயர்வு குறித்து விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சில நாடக்ளுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது பவன்குமார் பன்சால் பதவியேற்ற அன்றே கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது