இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே நேற்று பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இருநாட்டுக் கடற்படைகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவர் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
பாகிஸ்தான் கடற்படைத் தளபதியின் அழைப்பின் பேரில்,நேற்று கராச்சி சென்றுள்ள இலங்கை கடற்படைத் தளபதி – வரும் 12ம் நாள் வரை - ஒருவார காலம் அங்கு தங்கிருப்பார்.
இதன் போது கராச்சியில் உள்ள முக்கியமான கடற்படைத் தளங்கள் அனைத்துக்கும் சென்று பார்வையிடவுள்ளார்.
அத்துடன் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான உறவுகளை வரும் காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் அவர் பாகிஸ்தான் தளபதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார்.
கராச்சியில் நடைபெறும் அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கிலும் இலங்கை கடற்படைத் தளபதி கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைத் தளபதியாக அண்மையில் பொறுப்பேற்ற பின்னர், வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே வெளிநாடு ஒன்றுக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரபூர்வ பயணம் இதுவாகும்.