நாகப்பட்டினத்தில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓஎன்ஜிசி ஒப்புக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 47 ஆயிரத்து 500 வழங்க ஓஎன்ஜிசி நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நிலங்களை ஒரு வருடத்திற்குள் சீரமைக்கவும் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாகவும், ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியில் இருந்து நரிமணத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுச் செல்லப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்த குழாய்களில் கடந்த 10 நாட்களாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கச்சா எண்ணெய் விளை நிலங்களில் பரவியுள்ளதால் 100 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும், 20 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலங்களில் 3 ஆண்டுகள் வரை விவசாயம் செய்ய முடியாது என மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.