மதுரை அருகே நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கடந்த 30 ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு சென்றுவிட்டு வாகனத்தில் திரும்பிய 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 21 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரு நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர். மதுரை புளியங்குளத்தைச் சேர்ந்த தேசிங்குராஜா நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே ஊரைச் சேர்ந்த ரஞ்சித் இன்று அதிகாலை உயிரிழந்தார். பின்னர், அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.